சென்னை

நாளை சென்னை ராஜரத்தினம் அரங்கம் அருகில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளைக் காலை 9.30 மணிக்குச் சென்னை எழும்பூர்  ராஜரத்தினம் அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா நடைபெறுகிறது.  இதையொட்டி ராஜரத்தினம் அரங்கம் அருகில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது எனப் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு :

காலை 7.30 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையில் ருக்குமணி இலட்சுமிபதி சாலையில் இராஜரத்தினம் அரங்கில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களின் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

மேலும்  பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி இலட்சுமிபதி சாலை வழியாக எஸ்கார்ட் பாய்ண்ட் செல்லவேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாக அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளை அடையலாம்.

அடுத்ததாக  எத்திராஜ் சாலை ருக்குமணி இலட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து (எஸ்கார்ட் பாய்ண்ட்) பாந்தியன் இரவுண்ட்டான நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் மேற்படிச் சந்திப்பிலிருந்து கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாகப் பாந்தியன் சாலையினை அடையலாம்.

மேலும் பாந்தியன் சாலை மாண்டியத் சாலைச் சந்திப்பிலிருந்து ருக்குமணி இலட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட சந்திப்பிலிருந்து (மியூசியம் அருகில்) பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்துத் தாங்கள் செல்லவேண்டிய இடத்தினை அடையலாம்.