அமர்நாத் யாத்திரை ரத்தால் வர்த்தகம் பாதிப்படையும் : வர்த்தகர்கள் கருத்து

Must read

ம்மு

ந்த வருடமும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் வர்த்தகம் பாதிப்பு அடையும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பனிக் குகையில் தானே உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்ய லட்சக்கணக்கானோர் வருடா வருடம் வருவது வழக்கமாகும்.   கொரோனா பரவல் காரணமாகச் சென்ற ஆண்டு அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.   இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவல் இன்னும் முழுமையாக குறையாததால் இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக கொரோனாவால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.  இரண்டாம் ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து ஆனதால் பக்தர்கள் மட்டுமின்றி வர்த்தகர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து காஷ்மீர் வர்த்தகர் சம்மேளன பொதுச் செயலர் பஷீர் அகமது, “அமர்நாத் யாத்திரை காலத்தில் எங்களுக்கு நல்ல வர்த்தகம் நடக்கும்.   இந்த வருடமாவது வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்த்தோம்.  ஆனால் அது ரத்து செய்யப்பட்டதால் எங்கள் வியாபாரத்தை மட்டுமின்றி பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article