டெல்லி: செப்டம்பர 2023  மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,62,712 கோடி என  தெரிவித்துள்ள மத்திய நிதிய அமைச்சகம், இது ஆண்டுக்கு 10% வளர்ச்சியை காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மொத்த வசூலில்,  சிஜிஎஸ்டி ₹29,818 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹37,657 கோடி, ஐஜிஎஸ்டி ₹83,623 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹41,145 கோடி உட்பட) செஸ் ₹11,613 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹881 கோடி உட்பட) என தெரிவித்துள்ளத.

இதுதொடர்பாக  மத்திய நிதி அமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில், 2023ம் ஆண்டு செப்டம்பர்  மாத ஜிஎஸ்டி  மொத்தம்  1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.11,613 கோடியும்( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.881 கோடியும் சேர்த்து) அடங்கும்.

இது கடந்த 2022 செப்டம்பர்  மாதம் வசூல் ஆன தொகையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த நிதியாண்டில் ( 2023- 24), 4வது முறையாக  ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ.9,92,508 கோடி வசூல் ஆகி உள்ளது.  இது கடந்த 2022 -23 நிதியாண்டின் முதல் காலாண்டில் வசூல் ஆன ரூ.8,93,334 கோடியை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.

2023 செப்டம்பர் மாதத்திற்கான வருவாய், கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 10% அதிகமாகும். மாதத்தின் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வருவாயை விட 14% அதிகமாகும்.