சென்னை: தமிழ்நாட்டில்  இறுதி வாக்காளர் பட்டிலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாக சாகு வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி பேர் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள் சேலத்தில் அதிகம் இருப்பதாகவும், அதிக வாக்காளர் உள்ள தொகுதியாக சோளிங்கநல்லூர் தொகுதி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் திருமகன் ஈவேரா மறைவு காரணமாக காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார்.

சென்னையில், தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  இன்று வெளியிட்டார். முன்னதாக,  வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ஆம் தேதி வரை திருத்தப்பணிகள் நடைபெற்றன.  அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகளுக்காக, அதாவது பெயர் சேர்க்க 10.54 லட்சம் விண்ணப்பங்களும், திருத்தங்கள் மேற்கொள்ள 2.15 லட்சம் விண்ணப்பங்களும்  பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம்,  தமிழ்நாடு முழுவதும் 6,20,41,179 வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்களில்,  ஆண்கள்  3,04,89,866 பேரும், பெண்கள் 3,15,43,286 பேரும், 8027 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.

மேலும், 4,48,138 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாகவும் 4,66,374 வாக்காளர்கள்  18 முதல் 19 வயதுடையவர்களாகவும் உள்ளனர்.  

இதுவரை,  3.82 கோடி வாக்காளர்கள்,  தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். 

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில், 6.66 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில்  1.70 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாகு, ஜனவரி 1ம் தேதி 17 வயது பூர்த்தி அடைந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  விண்ணப்பிக்கலாம். ஆனால் 18 வயது பூர்ந்தியடைந்த பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என  கூறினார்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் சேலம் மாவட்டத்தில் அதிகமாக இருப்பதாகவும், அதாவது 45,880 பேர் உள்ளதாக தெரிவித்தவர்,

80வயதை கடந்த வாக்காளர்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,25,494 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல்,   மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின்  பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பார்த்து கொள்ளலாம் என கூறினார்.

வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இணையம் மூலமாக www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 19590 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதில் பெறலாம் என்றும் கூறினார்.

திருமகன் மறைவையொட்டி காலியாகும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடக்கும் என்றவர், காலியிடம் எற்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட  வேண்டும் என்பது விதிமுறை என்றும் கூறினார்.

மேலும்,

இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி கமிஷனரும், மாவட்டங்களில் கலெக்டர்களும் வாக்காளர் இறுதிப்பட்டியலை இன்று வெளியிட்டனர்.