டெல்லி: சிதைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்ற ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டே இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதை வங்கிகள் முழுமையாக செயல்படுத்தாத நிலையில், தற்போது மீண்டும் அறிவித்து உள்ளது.

அதன்படி சிதைந்த நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட குறிப்புகள், 2009.02-ஜூலை-2018 இந்திய ரிசர்வ் வங்கி (குறிப்புத் திரும்பப்பெறுதல்) விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாற்றப்படும் என தெரிவித்து உள்ளது.

, கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற ஒவ்வொரு மாநிலங்களிலும், அங்குள்ள ரிசர்வ் வங்கி கிளைகளை பொதுமக்கள் அணுக வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால்,  கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலை இருந்து வந்தை இதனால், பல கோடி ரூபாய் வீணாகி வந்தது. அதை தடுக்கும் வகையில்,  கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் கொரோனா தொற்று காரணமாக, வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.

இதையடுத்து, பொதுமக்கள் இனிமேல்  கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அத்துடன்  பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.