மழை வெள்ளத்திலும் கடமையை செய்யும் அமைச்சர்கள் அதிகாரிகள்

வடகிழக்குப் பருவ மழை இந்த முறை வட தமிழகத்தையும்,குறிப் பாக சென்னை நகரையும் புரட்டிப் போட்டிருக்கிறது!

கடந்த அ. தி. மு. க. ஆட்சிகளில், முதலில் ஜெ. ஆட்சியில்… ஆயிரக்கணக்கில் மரணங்கள், உடைமைகள் இழப்பு, எடப்பாடி ஆட்சியில வெள்ளக் கட்டுமானங்களில் ஊழல், திட்டமிடாமையால் வெள்ளைப் பாதிப்புகளில் மக்கள் அவதிப் பட்டனர்!

அதன்பிறகு.. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி, “நாங்கள் 1000 கோடி ரூபாயில் பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்! எனவே இனி சென்னையில் மழை நீர் தேங்காது..! ” என்றார் உறுதியாக!!

அவர் சொன்னது பொய் என்பதை இன்று சென்னை மக்கள் கண்ணெதிரே பார்க்கிறார்கள்!

ஆனால், இப்போது களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்… அமைச்சர்கள்… அதிகாரிகள்… சுறுசுறுப்பாகச் செயல்படுவதை மக்கள் பாராட்டுகிறார்கள்!

ஆனால், எடப்பாடியோ “தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை” என்று கடுமையாகச் சாடுகிறார்!

** மழை வெள்ளத்தில்.. அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லறை அருகே மரம் ஒன்று ஒருவர் மீது விழ… அவர் மயக்கமுற்றுள்ளார்!

அங்கிருந்த சிலரோ, அவர் இறந்து விட்டதாக நினைத்து ள்ளனர்..

அப்போது அந்த வழியாக வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி என்பவர், அந்த மனிதரைத் தூக்கித் தன் தோள் மீது போட்டுக் கொண்டு.. ஒரு ஆட்டோவைப் பிடித்து அந்த மனிதரை ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி இருக்கிறார்!

அந்த மனிதரும் விரைந்து சிகிச்சை செய்யப்பட்டு நலமாக இருக்கிறார்!

கடமையில் ஒரு காவலராகவும், மனிதாபிமானத்தின் ஒரு தாயாகவும் விரைந்து செயல்பட்ட அவரை மக்கள் போற்றுகிறார் கள்… முதலமைச்சரும் நேரில் பாராட்டி இருக்கிறார்!

நாமும் பாராட்டுகிறோம்!

*** ஓவியர் இரா. பாரி. !