டில்லி:

மோடி அரசின்  ஜிஎஸ்டி வரி காரணமாக சுமார்  90ஆண்டுகள் பழமையான பிஸ்கட் நிறுவனம் இன்று தள்ளாடி வருகிறது. இதன் காரணமாக சுமார் 10ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பிஸ்கட் நிறுவனமான பார்லே ஜி 1929ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 90 ஆண்டுகள் பழமையான இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 10 இடங்களில் சொந்த பிஸ்கட் தயாரிப்பு கம்பெனிகள் மற்றும் 125 காண்டிராக்ட் நிறுவனங்களும் உள்ளன.  1லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மோடி அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு காரணமாக, வியாபாரம் நலிவடைந்த நிலையில், தற்போது 10ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

பா.ஜ.கவின் தவறான பொருளாதார கொள்கை, ஜிஎஸ்டி வரி, பணமதிழப்பு போன்ற  காரணங் களால் இந்தியபொருளாதாரம் வரைலாறு காணத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது.  குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில்கள் அடியோடு முடங்கி உள்ளது. பல சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்படும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதுபோல  ஆட்டோ மொபைல், ஜவுளி, ரியல் எஸ்டேட் போன்ற பெரும் நிறுவனங்களும்  தவித்து வருகின்றன.

இந்த நிலையில், பார்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பிஸ்கட்டுகளுக்கான வரி 12% இருந்த நிலையில் ஜிஎஸ்டியில் 18% அதிகரித்ததே தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி உயர்வால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்தவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டதாகவும், விலை ஏற்றப்பட்டதால், தங்கள் பிஸ்கெட்டுகளின் விற்பனை குறைந்துள்ளதாகவும் பார்லே நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியை பிரபல பிஸ்கெட் நிறுவனமான பிரிட் டானியாவும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

உணவுப்பொருள்களின் மீதான வரி விதிகிம் என்றும் குறைந்துதான் இருக்கவேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட அரசுக்கு இல்லாமல் போய்விட்டதா என்பதுதான் சாதாரண குடிமக்களின் கேள்வி.