சென்னை
நாளை சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
முதல்வர் மு க் ஸ்டாலின் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட இலக்கு நிர்ணயித்துள்ளார். எனவே இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது..
மாநாட்டின் தொடக்க விழா நாளை காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக முதலீட்டாளர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை அமைச்சர் பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் உற்பத்தி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகின்றன. பல தொழில் துறை அரங்குகளும் இடம் பெறுகின்றன. மாநாட்டில் 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.