டில்லி

நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் 5 மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி ஒத்தி வைக்கப்பட்டஹ்டு.  இந்ந்திலையில்  ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன.

இதில் 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் கொண்டிருந்தபோதே, “இந்தியா” கூட்டணியின் கூட்டம் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

அன்று வெளியான தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின்படி தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜகவிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைத்துக் கொண்டது.

நாளை நடக்கவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முன் கூட்டியே அறிவிக்காததால் தம்மால் கூட்டத்தில் கலந்துக் கொள்ள  முடியவில்லை என மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.   மேலும் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன.

எனவே நாளை நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த கூட்டம் அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு மீண்டும் எப்போது கூடும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் கட்சி வட்டாறம்க்ச்ள் தெரிவித்துள்ளன.