மிக்ஜாம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது அதன் வேகத்தை சுமார் இருமடங்கு அதிகரித்து 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் சென்னை கடற்கரையை ஒட்டி புயல் பயணிக்கும் நேரத்தில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

‘மிக்ஜாம்’ புயல் : சென்னையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது… ரயில், விமானம், பேருந்து சேவை பாதிப்பு…