சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதை அடுத்து 20 க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை சென்ட்ரல் ரயில்கள் நிலையம் வரவேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது தவிர சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூரு, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக அங்கிருந்து வரவேண்டிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

தவிர, சாலைகள் மற்றும் சுரங்கப்பாலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கிய சாலைகளில் குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதை அடுத்து பேருந்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் பொது பேருந்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதை அடுத்து அத்யாவசிய சேவைகளுக்கான போக்குவரத்து மட்டும் இயங்கி வருகிறது.

கனமழை காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தம்