சென்னை
நாளை 13/11/2021 அன்று சென்னையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனால் மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததை அடுத்து மழை நின்றுள்ளது.
ஆயினும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் முழுமையாக வடியவில்லை. மழை நீரை அகற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையொட்டி தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதில் ஒரு பகுதியாக நாளை அதாவது 13.11.2021 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.