டில்லி

நாளை பிரதமர் மோடி சென்னை – நெல்லை உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார்.

நாடெங்கும் வந்தே பாரத் ரயில் சேவைகளைப் புதிது புதிதாக இந்திய ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது.  இந்த ரயில் சேவைகள் மூலம் விரைவாக ரயில் பயணங்கள் நடக்கும் என்பதாலும் ரயில்கள் வெளிநாடுகளுக்குச் சமமாக நல்ல வசதியாக அமைந்துள்ளதாலும் பயனிகள் மிகவும் மகிச்ந்நி அடைந்துள்ளனர்.

அவ்வகையில் சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 11 மாநிலங்களில் இந்த ரயில் சேவைகள் இணைப்பை ஏற்படுத்த உள்ளது.

அந்த ரயில் சேவைகள் விவரம் வருமாறு:

  1. உதயப்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  2. திருநெல்வேலி, – மதுரை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  3. ஐதராபாத் – பெங்களூரூ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  4. விஜயவாடா – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  5. பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  6. காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  7. ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  8. ராஞ்சி – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  9. ஜாம்நகர் – அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிர்ஸ்

ஆகியவை ஆகும்.