நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் குவியும் பக்தர்கள்

பம்பா,

நாளை தைத்திங்கள் முதல் நாளான 1ந்தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். இதை காண பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நாளை ( 14-ந்தேதி ) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு சபரிமலைக்கு தற்போது வருகை தர தொடங்கி உள்ளனர்.  தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுமார் 12 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நாளை நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே கடந்த 11ந்தேதி எரிமேலியில் இருந்து பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது ஐயப்ப பக்தர்கள் தங்கள்  சரணகோ‌ஷம் முழங்க ஆடிப்பாடி ஐயப்பனை வழிபட்டனர்.

மேலும், சபரிமலைக்கு புதியதாக வரும கன்னி சாமிகள் எப்போது  வருகை தராமல் இருக்கிறார்களோ அப்போது தான் தனது திருமணம்   மாளிகை புரத்தம்மனுடன் நடைபெறும் என்று ஐயப்பனர் கூறியதாக ஐதீகம்.

இதன்படி நாளை , மாளிகைபுரத்தமன் சபரிமலையில் எழுந்தருளி இந்த வருடமாக தனது திருமணம் நடைபெறுமா என்று காத்திருக்கும்  நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதையடுத்து வரும 18-ந்தேதி அவர் சரங்குத்தி வரும்போது கன்னி சாமிகள் சபரிமலைக்கு வருகை தந்தற்கு அடையாளமாக அங்கு சரங்குத்தப்பட்டு இருப்பதை பார்த்து  ஏமாற்றத்துடன் மீண்டும் மாளிகைப்புரத்திற்கு திரும்பி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

வருடந்தோறும், சபரிமலைக்கு கன்னிசாமிகள் வந்தவண்ணம் இருப்பதால் இந்த நிகழ்வும்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், நாளை மகரவிளக்கு பூஜை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில்  திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆளில்லாத குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: devotees accumulating in Sabarimala, tomorrow Magara vilakku Pooja, நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் குவியும் பக்தர்கள்