சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்டு 15) கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வடிவிலான  முகமூடிகள் டிரெண்டாகி வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை)  நாடுமுழுவதும் கொண்டாடப்பட உள்ளது.  பொதுவாக சுதந்திர தினத்திற்கு முன்பாக தேசிய கொடிகள், மூவர்ண தோரணங் களுக்கான ஆர்டர்கள் மற்றும் விற்பனை அமோகமாக நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுதந்திரத்தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பொதுமக்கள் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள் இன்றி கொடியேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நடப்பாண்டில், பொதுமக்களின் நலன் கருதி சுதந்திர கொடியின் வண்ணத்திலான முகக்கவசங்கள் வெளியாகி உள்ளது.  மக்களியே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  தேசிய கொடி வண்ண முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
தேசபற்றை கொரோனா விழிப்புணர்வுடன் கொண்டாட இந்த முகக்கவசங்கள் உதவும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.
அதே வேளையில், சுதந்திர தின நேரத்தின்போது விற்பனையாகும்,  மூவர்ண கொடிகள் விற்பனை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.