ரோடு

நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். எமவே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறும் என்று கடந்த 7-ந்தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த 10- ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 17 ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.

தேர்தல்லில் ப்ட்டியிட  திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 55 பேர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும், ஒரே சின்னத்தை பலர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.