சென்னை: 
சென்னையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் கடந்த இரண்டு நாட்களாக ரூ. 35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்யப் படுகிறது.
வெளி மாநிலங்களிலிருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவை அதிகரித்து விலை உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தக்காளி விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.