டோக்கியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து… இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

Must read

 

டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பாட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சி-யை 21-13, 22-20 என்ற புள்ளிகணக்கில் தோற்கடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.

2016 ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து இந்த ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார்.

ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த லோவ்லினா போர்கெய்ன் அரையிறுதிப்போட்டிக்கு நுழைந்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து பி.வி. சிந்துவும் அரையிறுதிக்குள் நுழைந்திருப்பதால் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் உறுதியாகி உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

More articles

Latest article