ஒலிம்பிக் டென்னிஸ் : அரையிறுதியில் தோல்வியைத் தழுவினார் ஜோகோவிச்

Must read

 

செர்பியாவைச் சேர்ந்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் அரையிறுதிப் போட்டியில் தோலிவியடைந்தார்.

இதுவரை இந்த ஆண்டு நடந்து முடிந்த அனைத்து கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தங்க ஸ்லாமாக மாற்ற நினைத்திருந்த கனவு இதன்மூலம் தகர்ந்தது.

அரையிறுதியில் ஜெர்மெனியின் அலெக்சாண்டர் வெரவ்-வை எதிர்த்து விளையாடிய ஜோகோவிச் 1-6, 6-3, 6-1 என்ற செட்களில் தோல்வி அடைந்தார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த ஜோகோவிச்சுக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே மிஞ்சியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article