டோக்கியோ ஒலிம்பிக்2020 – ஆடவர் மல்யுத்தத்தம்: வெள்ளி வென்றார் இந்திய வீர்ர் தாஹியா!

Must read

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பிற்பகல்  57கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில்  இந்திய வீரர் ரவி குமார் தாஹியா ரஷியன் ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவேவ்-ஐ எதிர்கொண்டார். ரஷ்ய வீரரை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர் தாஹியா சற்று தடுமாறினார். இதனால், 4-7 கணக்கில் ரஷ்ய வீரர் வெற்றி பெற்று தங்கதப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்திய வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த 2வது வெள்ளிப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தாகியா அனாயசமாக ஆடி பல்வேறு நாட்டு வீரர்களை வீழ்த்தினார்.  கொலம்பிய வீரர் டைகரஸ் அர்பேனோவை 13-2 என்று வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார், தொடர்ந்து, பல்கேரிய கிராப்லரை எளிதாக வீழ்த்தினார். 14-4 என்ற கணக்கில்  வீழ்த்தி, அரையிறுத்திப்போட்டிக்குள் நுழைந்தார்.

அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூர் இஸ்லாம் சனயேவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து இன்று இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் ஜாவூர் உகுவேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் தோல்வியுற்றதால், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 6 நிமிடத்தில் ஆட்டம் முடிவுபெற்றது.

இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்கம் கனவு தகர்ந்து விட்டது. ஒலிம்பிக்கில் இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், டோக்கியோ 2020 இல் இந்தியா இப்போது 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைக் கொண்டுள்ளது

More articles

Latest article