41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி…

Must read

டோக்கியோ: 41ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கி அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒலிம்பிக் இன்று காலை நடைபெற்ற  மகளிர் ஹாக்கி போட்டியில் தென்னாப்பிரிகாகை இந்திய அணி எதிர்கொண்டது.  இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் , 4-3 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் வந்தனா கட்டாரியா மூன்று கோல்கள் அடித்து சாதனை படைத்தார். இதன் மூலம் தனது காலிறுதி தகுதியை தக்க வைத்துள்ளது.
இந்தநிலையில், இன்று பிற்பகல்  அயர்லாந்துக்கு  அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி கடுமையாக இருந்தது. இறுதியில்  இந்திய பெண்கள் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றிபெற்றிருப்பது இந்தியர்களிடையே மகிழ்ச்சியையும், சந்தோஷசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article