சென்னை

இன்று சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறது.

நேற்று சென்னை பல்கலைக்கழகத் தேர்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டு நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகிறது.

பி.காம், முதுநிலை மாணவர்கள், https://egovernance.unom.ac.in/results என்ற இணையதளத்திலும், பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., சமஸ்கிருதம், உருது, அரபு மொழித் தேர்வு முடிவுகளை https://exam.unom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். முடிவுகள் வெளியான பிறகு, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், வருகிற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

மறுமதிப்பீட்டிற்கு ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான தொகையை, ‘பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் வரவோலையாகச் செலுத்த வேண்டும். இளநிலை மாணவர்கள் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதிக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.300 கட்டணத்தை ‘பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் வரவோலையாகச் செலுத்த வேண்டும்” 

என்று கூறப்பட்டுள்ளது..