சென்னை

பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து சென்னையில் ரூ.101.06 என விற்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவுப்படி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினசரி மாற்றி அமைக்கின்றன.  கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளன.  ஜூன் மாதத்தில் மட்டும் 12 முறை விலை ஏறி உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இன்று பெட்ரோல் மற்றும் டிசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.  இன்று சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.101.06 எனவும் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.94.06 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.   மாநிலங்களில் விதம் விதமான வரிவிதிப்பு விகிதத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது.

தற்போது மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 106.25 ஆகவும், டீசல் விலை ரூ 97.09 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. டில்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 100.21 ஆகவும், டீசல் ரூ 89.53 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100.23 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.50 ஆகவும் விற்கப்படுகிறது.