டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  930 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று தொற்று பாதிப்பு 40ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று (6ந்தேதி காலை நிலவரம்) 34,703 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிப்பு 43,733 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 9030 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் குணமடைவோர் விகிதம் 97.18% ஆக அதிகரித்துள்ளது. திடீரென தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய சுகாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,63,665 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 930 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,04,211 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்பில் இருந்து  47,240 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,99,534 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில்வ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,59,920 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும இதுவரை 36,13,23,548 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.