வரலாற்றில் இன்று 16.11.2016
நவம்பர் 16  கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1384 – பெண்ணாக இருந்தாலும் பத்து வயது “ஜாட்வீகா” என்பவள் போலந்தின் மன்னனாக முடிசூடினாள்.
1885 – கனடாவின் மேட்டிஸ் பழங்குடித் தலைவர் லூயிஸ் ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
1896 – முதற்தடவையாக மின்சாரம் மின்னாக்கி ஒன்றிலிருந்து நகருக்கு அனுப்பப்பட்டது.
1904 – ஜோன் பிளெமிங் வெற்றிடக் குழாயைக் கண்டுபிடித்தார்.
1945 – யுனெஸ்கோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1965 – சோவியத்தின் வெனேரா 3 விண்கப்பல் வெள்ளி கோளுக்கு செலுத்தப்பட்டது.
1973 – நாசா மூன்று விண்வெளி வீரர்களுடன் ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில் விண்ணுக்கு அனுப்பியது.
1988 – சுமார் 10 ஆண்டுகளுக்குபின் பெனசீர் பூட்டோ பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 – சார்ஸ் நோய் முதன் முதலில் சீனாவின் குவாங்டோங் என்ற இடத்தில் பதியப்பட்டது.
பிறப்புக்கள்
1922 – ஜோசே சரமாகூ, நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளர்
1930 – சின்னுவ அச்சிப்பே, நைஜீரிய எழுத்தாளர்
1982 – அமாரே ஸ்டெளடமையர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1999 – டானியல் நேத்தன்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1928)
2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன், நோபல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் (பி. 1912)
சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்