வரலாற்றில் இன்று 15.12.2016

Must read

வரலாற்றில் இன்று 15.12.2016
டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 – ஜப்பானில் மிட்சுபிஷி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1960 – மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1965 – த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.
1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும்.
1994 – இணைய உலாவி நெட்ஸ்கேப் நெவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது.
1995 – ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் “அப்துல் ரவூஃப்” என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997 – தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்காங்கில் கையெழுத்திடப்பட்டது.
2001 – பைசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

பிறப்புக்கள்
37 – நீரோ மன்னன், ரோமப் பேரரசன் (இ. 68)
1832 – அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (இ. 1923)
1852 – ஹென்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1908)
1945 – வினு சக்ரவர்த்தி தமிழ் திரைப்பட நடிகர்.

1971 – ஜீவ் மில்க்கா சிங், இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர்
இறப்புகள்
1675 – ஜொஹான்னெஸ் வெர்மீர், நெதர்லாந்து நாட்டு ஓவியர் ஆவார் (பி. 1632)
1950 – சர்தார் வல்லபாய் பட்டேல், இந்திய அரசியல் தலைவர் (பி. 1875)

1966 – வால்ட் டிஸ்னி, கார்ட்டூன் ஓவியர் (பி. 1901)

More articles

Latest article