வரலாற்றில் இன்று 09.12.2016

Must read

வரலாற்றில் இன்று 09.12.2016
டிசம்பர் 9  கிரிகோரியன் ஆண்டின் 343 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 344 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 22 நாட்கள் உள்ளன.
நிகழ்வு
1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினேர்வா” வெளியிடப்பட்டது.
1856 – ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905 – பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1917 – பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 – போலந்தின் முதலாவது அதிபராக “கப்ரியேல் நருட்டோவிச்” தேர்வு செய்யப்பட்டார்.
1937 – ஜப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
 
1946 – இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1979 – பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. 
1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1990 – லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
1995 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு
பிறப்புக்கள்
1946 – சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

இறப்புகள்
2006 – சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)
சிறப்பு நாள்
தான்சானியா – விடுதலை நாள் (1961)

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article