சென்னை,
மிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வார்டை படம் எடுத்ததாக செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செப்டம்பர் 22ந்தேதி  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ப்ட்டார். சிகிச்சை பலனின்றி  கடந்த  5ந்தேதி இரவு அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு குறித்து பல்வேறு சர்ச்சைக்கிடமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
 
இந்நிலையில், நக்கீரன்  இதழின் செய்தியாளர் அரவிந்தன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டை புகைப்படம் எடுக்க முயன்றதாக நேற்று கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு போலீசார்  அவரை விடுவித்தனர்.
இந்த கைது சம்பவம்  செய்தியாளர்களிடடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.