சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்ம மனிதன் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகால சிகிச்சைக்குப் பிறகு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்தார்.
இந்த நிலையில், இன்று மதியம், அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்ம நபர் போனில் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகிறார்கள்.
மிரட்டல் குறித்து  ஆயிரம் விளக்கு காவல் நிலைய, காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.