சென்னை

ன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

தற்கொலை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலர் தனிப்பட்ட காரணங்கள், குடும்ப காரணங்கள் என பல்வேறு காரணங்களுக்காகத் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து வருகின்றனர்.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு கிடையாது. எந்த பிரச்சினையும் தற்கொலையால் தீரப்போவதில்லை. உலக நாடுகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  அதன்படி மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு முதல் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது., ஆண்டு தோறும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 10ம் தேதியான இன்று உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று அரசு சார்பில் மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்குத் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எதற்கும் தற்கொலை எ தீர்வல்ல என்பதை உணர்ந்து அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே உலக தற்கொலை தடுப்பு தினத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.