சென்னை
இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளெ.
இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசிஉள்ளார். இந்த சந்திப்பு. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றது.
ஏற்கனவே தி.மு.க. சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என இரு தரப்புக்கும் இடையே பேசப்பட்டு இருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி எக்ஸ்தளத்தில்,
”மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமலஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்”
எனப் பதிவிட்டுள்ளார்.