மதுரை
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. எனக் கூறியுள்ளார்.
இன்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எப்போதும் யாராலும் முடக்க முடியாது. அந்த சின்னத்தை முடக்குவதற்கான சந்தர்பங்கள் இருந்தது; ஆனால் முடியவில்லை.
நிச்சயம் எடப்பாடி பழனிசாமி நல்லதை செய்வார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவார்.
எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு அதிகரித்து கொண்டிருக்கிறது. துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய முதல்வர் தற்போது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை
அவர் சாட்டையை சுழற்றி நடவடிக்கை எடுக்கவில்லை, தவெக தலைவர் விஜய்தான் சாட்டையை சுழற்றுவது போல தெரிகிறது.
என்று கூறியுள்ளார்.