கடலூர்

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடலூர் வருகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். தவிர புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் வருகிறார்.

அதன்படி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கடலூருக்கு செல்ல உள்ளார். இதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்றைய கடலூர் மாவட்டச் சுற்றுப் பயணத்தின்போது, பலவேறு நலத்திட்ட உதவிகள் வழங்குக உள்ளார். நாளை  தமிழ்க  முதல்-அமைச்சர் அவர்கள் நாளை (22.2.2025) வேப்பூர் வட்டம், திருப்பெயர் பகுதியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள “பெற்றோரைக் கொண்டோடுவோம்” மண்டல மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.