சென்னை
இன்று தமிழக காலைநிலை மாற்ற 3 ஆவது உச்சிமாநாடு தொடங்குகிறது.
உலகுக்கு மிக பெர்ய அச்சுதாலக உள்ள காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழக காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர் இன்று மற்றும் நாளை, தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க்கும் முதல்வர் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான இணையதளம், தொழிற்சாலை பசுமை குறியீடு போன்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.