இன்று திருக்கார்த்திகை – தீப வழிபாடு

Must read

ந்துக்களின் பண்டிகைகளில் விசேஷமானது திருக்கார்த்திகை. இன்றைய நாளில் வீடு முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது விசேஷம்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் இன்றைய தினத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு களை நடத்துகின்றனர்.
இன்று தமிழர்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தீப ஒளி ஏற்றப்பட்டு வண்ணமாக ஜொலிக்கும் திருநாளாகும்.
திருக்கார்த்திகை இன்றைக்கு மாலை வேளை களில் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றி மகிழ்ந்து வணங்குவர்.
தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது.  இதுவே உயிர்க ளுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞானசம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.

மங்களகரமான கார்த்திகை மாதம், கிருத்திகை (கார்த்திகை) நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை என்னும் பெரிய கார்த்திகை வருகிறது. இன்று  ஜோதி தரிசனம் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும்  இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அங்காரகன் மகிமை 
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார்.
கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.
கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான். சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திர நாளில் விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவில் சிவபெருமான் காட்சியளித்ததன் காரணமாக இந்நாளையே திருக்கார்த்திகை நாளாக கொண்டாடப் படுகிறது.
திருவிளக்கின் தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் பிரசன்னமாகி அருள்புரிகின்ற னர். சுடர் லட்சுமி யாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.
தீபம் ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் துன்பங்கள் அகலும், மேற்கு திசையில் ஏற்றினால் கடன் பிரச்சனைகள் அகலும், வடக்கு திசையில் ஏற்றினால் தடைகள் அகன்று தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.
எவ்வித காரணம் கொண்டும் தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தீபம் என்பது விளக்கு அதில் எண்ணை, திரி, சுடர் ஆகிய நான்கும் சேர்ந்ததே விளக்காகும். தீபம் ஏற்ற நெய், விளக்கெண்ணை, நல்லெண்னை, பயன்படுத்த லாம். நெய் தீபம் ஏற்றினால் சுகமான வாழ்வு கிடைக்கும். விளக்கெண்ணையில் தீபம் ஏற்றினால் புகழ் ஏற்படும்.
நல்லெண்ணையில் தீபம் ஏற்றினால் பீடைகள் அகலும் முக்கூட்டு எண்ணை ஐங்கூட்டு எண்ணைகளில் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
ஐந்து முகங்கள் கொண்டவிளக்குகளை ஏற்றுவது நல்லது. நமசிவாய என்ற ஐந்தெழுத்து திருமந்திரத்தை குறிப்பாக ஐந்து முகங்கள் உள்ளது.
 
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில்களும். தத்புருஷம், சக்தியோஜாதம், ஈசானம், அசோரம், வாமதேவம் என ஐந்து முகங்களும் சிவபெருமானுக்கு உண்டு. இந்த உலகுக்கு அடிப்படை ஆதாரமாக நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், என ஐந்து பஞ்ச பூதங்கள் உள்ளன.
இவை அனைத்தும் விளக்கின் ஐந்து முகங்களாக கருதப்பட்டு வருவதால் ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றுவது நல்லது. ஐந்து முகவிளக்கேற்றி அனைவரும் அகிலத்தில் ஐஸ்வர்யம் பெற்று வாழ கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.
கார்த்திகை விரதமிருந்து தீபமேற்றி வழிபட்டு நெல், பொரி உருண்டை நிவேதனம் செய்யுங்கள்.
தும்பைப்பூ முதலியனவுடன் சதுர்த்தியிலும், பௌர்ணமியிலும் தீபம் ஏற்றுபவர்கள் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று முக்தி அடைவர் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.
கார்த்திகை தீபம் ஏற்றுவோம் எங்கு ஒளி நிறைந்து காணப்படுகிறதோ அங்கே மகாலட்சுமி வாசம் செய்வாள்.
ஒவ்வொரும் இன்று வீட்டில் தீபம் ஏற்றி மகாலட்சுமி அருள் பெறுவோமாக….

திருவண்ணாமலை:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை. இங்கு அருள்பாலித்து வரும் அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக இன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டு, இன்ற மாலை  மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் (மகாதீபம்) ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.
விளக்கு ஏற்றி ஜோதி சொரூபமாக இறைவனை விளங்குவது மிகவும் பிரசித்தி பெற்றதும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையுமாகும்.
சிவனடியார்களும் நாயன்மார்களும் இறைவனை ஜோதிப்பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடியுள்ளனர். ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ள னர்.
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறை வனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.
திருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார்.
 

More articles

Latest article