உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை!

Must read

சென்னை,

மிழக உள்ளாட்சி  தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து  தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக  வழக்கின் காரணமாக தமிழகஅரசு பிறப்பித்த அரசாணை களை ரத்துசெய்து,   டிசம்பர் 31ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பானையை வெளியிடவும் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், அரசு சார்பில் ஒவ்வொரு முறையும் அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து  ஜனவரி 27ந்தேதி விசாரணைக்கு வந்தபோது,  உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய அறிவிப்பாணை வெளியிடுவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாநில தேர்தல் ஆணையம்,  உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டு உள்ளது அதற்கு அவகாசம் தேவை என கோரியது.

அதன்பிறகு பிப்ரவரி 10ந்தேதி  ஐகோர்டில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக தேர்தல் ஆணையம் மாநில அரசு  ஒத்துழைக்கவில்லை என்று குறை கூறியது.

இதற்கிடையில், தமிழக சட்டசபையில்  உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவி காலம் 6 மாதம் நீடிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

 

 

More articles

Latest article