இன்று 29 – 01 – 2022  சனி மஹாப்பிரதோஷம், 

Must read

இன்று 29 – 01 – 2022  சனி மஹாப்பிரதோஷம்,

மன கஷ்டம் தீர சிவன் ஆலயங்களில் இதை வாங்கிக் கொடுங்கள். செய்த பாவங்கள் நீங்க சிவனை இப்படி வழிபடுங்கள்.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

பிரதோஷ தினங்களில் சிவனை வழிபட்டு வந்தால் உள்ளத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. எல்லோருக்கும் எல்லா விதமான கஷ்டங்களும் தீர பிரதோஷ விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டு அவருடைய மந்திரங்களை ஜெபித்து வருவார்கள். அந்த வகையில் நாளை சனிக்கிழமை வரக்கூடிய இந்த பிரதோஷம் சனிமஹா பிரதோஷம் என்று மிகச் சிறப்பாக அழைக்கப்படும். பிரதோஷ தினத்தில் நாம் சிவன் ஆலயங்களில் இதை வாங்கிக் கொடுத்தால் எல்லா துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம்.

☘️

பிரதோஷங்களில் திங்கள் கிழமை வரும் பிரதோஷமும், சனிக் கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் விசேஷமானதாகக் கருதப்பட்டு வருகிறது. இதில் சனி பிரதோஷத்தில் சிவபெருமானை நோக்கி விரதமிருந்து வழிபட்டால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும். பாவங்களில் இரண்டு வகையான பாவங்கள் உண்டு. ஒன்று தெரிந்தே செய்யும் பாவங்கள், மற்றொன்று நம்மை அறியாமல் செய்யும் பாவங்கள். நம்மை அறியாமல் செய்யும் பாவங்களுக்குக் கூட தண்டனைகள் உண்டு என்கிறது கருட புராணம்.

 ☘️

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்தைக் கழிப்பதற்குத் தான் பரிகாரங்களையும் தேடுகிறோம். ஆனால் தெரியாமல் செய்த பாவங்களுக்கான எளிய பரிகாரம் இந்த சனி பிரதோஷம் விரதம் ஆகும். உள்ளத்தில் தீய எண்ணங்கள் நம்மையும் மீறி நமக்கு ஏற்பட்டால் சனி மகா பிரதோஷ விரதத்தை மேற்கொள்ளலாம். நாளைய நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி வீட்டில் சிவன் படம் அல்லது சிவ லிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரங்களை மேற்கொள்ளலாம்.

☘️

சிவன் படம் வைத்திருப்பவர்கள் படத்திற்குக் குங்குமப் பொட்டிட்டு, வில்வ மாலை சாற்றி வழிபடலாம். பிரதோஷ தினத்தில் எவரொருவர் வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு. தெரியாமல் வில்வ இலையால் அர்ச்சித்த வேடனுக்குக் கூட சிவபெருமான் அருள் புரிந்ததாகப் புராணங்கள் கூறுகிறது. அப்படியிருக்கப் பிரதோஷ நாளை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.

☘️

சனி பகவானுடைய பாதிப்புகள் குறையவும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் தீரவும் சனிக்கிழமையில் வரும் சனிப் பிரதோஷத்தன்று சிவபெருமான் ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசித்து வழிபட்டு வர வேண்டும். அங்குச் சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகங்களில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை வாங்கிக் கொடுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் மனக் கவலைகள் அகன்று நிம்மதி பிறக்கும்.

☘️

சிவாலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த சனி பிரதோஷ நாள் அன்று முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதமிருந்து சிவ மந்திரம், சிவ ஸ்தோத்திரங்களையும் உச்சரிக்க வேண்டும். வீட்டில் வில்வ இலை கொண்டு அர்ச்சித்து விளக்கேற்றி, நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். உத்ராட்சை அணிந்தவர்கள் கட்டாயம் சனிப் பிரதோஷ விரதம் இருந்தால் நிறையவே நன்மைகளைப் பெறலாம்.

☘️

இறை பக்தி மேலிடவும், நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியவும் சனி மஹா பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு விளக்கு ஏற்றும் எண்ணெய் ஆவது வாங்கிக் கொள்ளுங்கள். உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் சனி பிரதோஷ நாளன்று, ‘ஓம் நம சிவாய’ என்னும் இந்த பஞ்சாட்சர மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தால் கூட போதும் அளப்பரிய நன்மைகளைப் பெறலாம்.

More articles

Latest article