சென்னை

ன்று இரவு 7 மணி வரை தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  வானிலை ஆய்வு மையம் இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை வழியே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.