சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும்  புறநகர் ரயில் சேவையில் இன்றுமுதல்  21 நாட்கள் சில மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  இன்றுமுதல் மே மாதம் 17ந்தேதி வரை பல ரயில்கள் செய்யப்பட்டும், சில ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் (மே 17 வரை):

அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்கள் மே 17 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

திருத்தணியில் இருந்து இரவு 9.15 மற்றும் 11.10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில்கள் மே 16-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதிநேர ரத்து மற்றும் சேவை மாற்றம்:

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும் (மே 16 வரை).

திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் செல்லும் ரயில் திருவாலங்காட்டில் இருந்து இயக்கப்படும்.

மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]