இன்று: ஜூன் 24

Must read

ka. appa
கா. அப்பாத்துரை  பிறந்தநாள் (1907)
அப்பாதுரையார் என்று மதிப்புடனும் அன்புடனும் அழைக்கப்பட்ட கா. அப்பாதுரை மிகச் சிறந்த தமிழ் மொழியியல் வல்லுநர்களில் ஒருவர்.     மேலும், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிகளிலும் வித்தகராக இருந்த இவர்  பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர்.
அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தவர் அப்பாதுரை.  மே 26, 1989ம் ஆண்டு மறைந்தார்.
 
 
download
கண்ணதாசன் பிறந்தநாள்  (1927)
புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான கண்ணதாசன்,  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர் . அக்டோபர் 17 1981 அன்று மறைந்தார்.
 
 
download (1)
 எம்.எஸ். விஸ்வநாதன் பிறந்தநாள் (1928)
எம்.எஸ்.வி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட எம். எஸ். விஸ்வநாதன்  தமிழ்த்திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக விளங்கியவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில்  பிறந்த இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் .
1953 ஆம் ஆண்டில் வெளிவந்த  எம்.ஜி.ஆர். நடித்த  ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம்,கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.    14 ஜூலை 2015  அன்று மறைந்தார்.
 
 

More articles

Latest article