ஒரு ஐபோன் வாங்கும் பணத்திற்கு இப்போது வாழ்நாள் முழுவதும் ஒரு முழு வீட்டிற்கே மின்சாரம் வழங்கக் கூடிய ஒரு காற்றாலை விசையாழி வாங்க முடியும். பதவிக்கு வந்து உடனடியாக, கேரளா (இந்தியாவின் தென் மாநிலம்) முதல்வர் பினராயி விஜயன், அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஏனெனில் இந்த அதிரப்பள்ளி நீர்மின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் ஏற்றத்தாழ்வு உருவாகி, மாநிலத்தில் பெரிய இயற்கை அருவிகளான அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிகளை அழித்துவிடும் எனச் சுற்றுச்சூழல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.


இத்திட்டத்தின் தாக்கத்தைப் பற்றி அரசு அறியாமல் இல்லை, ஆனால் மின்சாரத்திற்காகத் தனியார் துறையைச் சார்ந்து இருக்கும் கேராளாவின் அதிகரித்து வரும் மின்சார நெருக்கடியைச் சமாளிக்க இருக்கின்ற வளங்களை வைத்து ஏதேனும் செய்து தான் ஆக வேண்டும், வேறு வழி இல்லை என்று கூறுகிறார்.
மற்ற மாநிலங்களில் இந்த விஷயங்களில் ஒன்றும் வித்தியாசம் இல்லை. கேரளா கிட்டத்தட்ட 100 சதவீத மின் மிகை மாநிலமாக இருந்தாலும், இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் இருட்டில் தான் இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு, இந்நாள் வரையில் மின்சாரம் ஒரு கனவாகவே உள்ளது.

இந்தியாவின் எரிசக்தி நெருக்கடியைச் சரி செய்ய இரண்டு அண்ணன் தம்பிகள் ஒரு விஷயம் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் சுற்றுச்சூழல் சமநிலை சிறிதும் பாதிக்காமல் ஒரு புதிய தீர்வை உருவாக்கியுள்ளனர்.

கேரளாவைச் சார்ந்த அருண் மற்றும் அனூப் ஜார்ஜ் சகோதரர்கள் அவந்த் கார்டே இன்னோவேஷன்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி, வாழ்நாள் முழுவதும் ஒரு முழு வீட்டிற்கு போதுமான மின்சாரத்தை வழங்கும் குறைந்த-செலவு காற்றாலை விசையாழியை உருவாக்கியுள்ளனர். வெறும் அமெரிக்க $ 750 ஒரு முறை செலவு உடன் மின்விசிறி அளவுள்ள இந்தக் காற்றாலை விசையாழி நாள் ஒன்றுக்கு 5 kWh/kW உருவாக்க முடியும்.
“எங்கள் இலக்கு, மின்சக்தி வறுமையை அகற்றி, மாநில மின்சக்தி கட்டமைப்புகள் மற்றவர்களிடம் சார்ந்திருக்கும் அளவைக் குறைக்கவும், விநியோகிக்கப்படும் மலிவான புதுப்பிக்கத் தக்க மின்சக்தி மூலம் அனைவருக்கும் மின்சக்தி தன்னிறைவு உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நமது உலகில் ஒரு தூய்மையான சூழல், புதிய பொருளாதாரச் செழிப்பு மற்றும் சமூக மாற்றத்தைக் கூட்டாக உருவாக்க முடியோம், “என்று நிறுவனத்தின் ‘நாம் என்ன செய்கின்றோம்’ என்கிற அறிக்கை கூறுகிறது.
“எங்களது முதல் வெளியீடு 2016 ல் சந்தையில் வெளியிடத் தயாராக உள்ள குடியிருப்பு, வணிக, விவசாய, கிராமபுறம் மின்சாரம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு உபயோகப்படக்கூடிய மிகவும் மலிவான சிறிய காற்றாலை விசையாழி.”
உலகின் பெரிய ஆற்றல் நுகர்வோரில் 3.4 சதவீதம் உலக ஆற்றல் நுகர்தல் பங்களித்து இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு தொலைதூர கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு வரப் பெரிய உள்கட்டமைப்புக்கான செலவுகளைத் தாங்க முடியவில்லை. மின் கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகளை நிறுவுதலுக்கு பல மில்லியன் டாலர்கள் செலவாகும் பெரிய முதலீடுகள் தேவைப்படும். அதனால் இந்தப் புதிய நிறுவனத்திற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
இங்குத் தான் அவந்த் கார்டேவின் பயன்பாடு நுழைகிறது. “பொதுவாக 1kW ஆற்றல் உருவாக்கும் சிறிய காற்றாலை விசையாழிக்கு இந்திய ரூபாய் 3-7 லட்சம் (அமெரிக்க $ 4,000-10,000) செலவாகும், ஆனால் எங்கள் நிறுவனம் அதனை இந்திய ரூபாய் 50,000 க்கும் (அமெரிக்க $ 750) குறைவாக விற்க திட்டமிட்டுள்ளது. அதிகளவு உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறையும், ” என்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு பேட்டியில் அருண் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருவனந்தபுரத்தின் தலைநகரில் ஒரு தேவாலயத்தில் இந்நிறுவனம் அதன் பைலட் திட்டத்தை தொடங்கியது. அது உருவாக்கியுள்ள சிறிய காற்றாலை விசையாழியின் முன்மாதிரி 300 கிலோவாட் அல்லது அதைவிட அதிகமாகக் கூட மின்சக்தி கொள்ளவு அளக்கக்கூடியது, என்று அருண் கூறினார்.
இந்தப் புரட்சிகர தயாரிப்பு, இந்தியாவில் டாப் 20 கிளீன்டெக் கண்டுபிடிப்புகளில் ஒரு இடத்தை அவர்களுக்குப் பெற்று கொடுத்துள்ளது. ஒரு பில்லியன் டாலர் சுத்தமான எரிசக்தி முதலீட்டு வாய்ப்பு அடைவு கீழ் “ஐ.நா. வின் அனைவருக்கும் பேண்தகு சக்தி” முன்முயற்சி என்பதில் இந்தியாவிலிருந்து 10 சுத்தமான எரிசக்தி நிறுவனங்களின் பட்டியலில் இந்நிறுவனமும் இடம் பெற்றுள்ளது.
உலக காற்றாலை ஆற்றல் சபை படி, உலகளவில் நிறுவப்பட்ட காற்றாலை மின் திறன் அடிப்படையில், சீனா, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனிக்குப் பிறகு, இந்தியா 4 வது இடத்தில் உள்ளது.
ஒருவேளை, அவ்ந்த் கார்டே இன்னோவேஷன்ஸ் வெற்றி பெற்றால், கேரளாவால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிகளுக்கு ஆபத்து வராமல் வைத்திருக்க முடியும்.