ரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன்  விலகுவதால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரலாமா என்று கேட்டு நடந்த பொதுஜன வாக்கெடுப்பில்,  வேண்டாம் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதையடுத்து பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுகிறது.
இதையடுத்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிரிட்டன் பவுண்ட் மதிப்பு பெருமளவில் சரிந்தது.  1980க்கு பிறகு இந்த அளவுக்கு சரிவை பவுண்ட் நாணயம் கண்டதில்லை. இதன் எதிரொலியாக இந்தியாவின் பண மதிப்பும் சரிந்தது. அதோடு மும்பைப் பங்குச் சந்தையும் சரிவைக் கண்டது.
large_1400871984
அமெரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து பண மதிப்பு 1.35 பவுண்டாக சரிந்தது. இதே போல இந்திய ரூபாயின் மதிப்பும் 96 காசுகள் சரிந்து ரூ. 68 ஆக உள்ளது.
இந்திய பண மதிப்பு சரிவு, பங்குச்சந்தை சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

அவர், “இந்தியா தனது ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க உறுதியுடன் இருக்கிறது.  பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நிதிச் செலவு கட்டுப்பாடு மற்றும் குறைந்து வரும் பணவீக்கம் ஆகியவகளால் இந்தியப் பொருளாதாரம் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறது.
இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மற்றும் பிற கட்டுப்பாட்டாளர்களும் இந்த விஷயத்தால் ஏற்படக்கூடிய எந்த ஒரு குறுகிய கால கொந்தளிப்பையும் சமாளிக்க தயாராக இருக்கிறார்கள்” என்று அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.