சென்னை

ன்றுடன் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.   இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.   இங்கு திமுக அணி, அதிமுக அணி, அமமுக அணி, மநீம அணி மற்றும் நாம் தமிழர் கட்சி என பலமுனை  போட்டி நிலவுகிறது.   ஆயினும் திமுக மற்றும் அதிமுக அணிகளுக்கிடையே தான் போட்டி என்னும் நிலை உள்ளது.

கடந்த 12 ஆம் தேதி  தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.   இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி தினம் ஆகும்.  எனவே பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது.  சரியாக 3 மணிக்கு வருவோருக்கு டோக்கன் வழங்கப்பட்டு மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இன்று வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த பிறகு வேட்பு மனுத் தாக்கல் செய்தோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.    நாளை முதல் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது.  வரும் 22 ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி தினமாகும்.  அதன் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.