மேஷம்

பேச்சில் சாபம்.. பாய்ஸன் என்று எதுவும் கலக்காமல் அன்புடனும் பண்புடனும் பணிவுடனும் பேசுவது மத்தவங்களுக்கு நல்லதோ இல்லையோ உங்களுக்கு ரொம்பவே நல்லது. ஸ்டூடன்ட்ஸ்க்கு இது ஜாக்பாட் காலம். அனேகமாய் ஸ்பெக்ஸ் பவர் கூடியிருக்கும். பெரியவங்க ஆசி கிடைக்கும். கோயில் களுக்கு விசிட் போவீங்க. சிஸ்டர்ஸும் பிரதர்ஸ்ஸும் அலுவலக விஷயமாவோ படிப்பு சம்பந்தமாவோ வெளியூருக்கோ அல்லது ஃபாரினுக்கோ போவாங்க. விவேகமாக முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீங்க. குழப்பங்களிலிருந்து விடுபடுவீங்க. உடல் நலத்தில் சற்றுக் கவனம் தேவை. உறவினர் மற்றும் நண்பர் போல் நடிக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்வீங்க. குழந்தைகளின் எதிர்காலத் தீர்மானம் சந்தோஷம் தரும்.

ரிஷபம்

எந்த சிநேகிதரையும் சிநேகிதியையும் பகைச்சுக்க வேண்டாம். எந்த பகைவர்கிட்டயும் வம்புக்குப் போக வேண்டாம். இன் ஷார்ட் நண்பர்களிமும் பகைவர்களிடமும் சர்வஜாக்கிரதையா இருங்க.அலுவலகத்தில்   பொறுமையும் பொறுப்புமாய்ப் பணியாற்றி அவங்க கிட்டேயிருந்து உங்களுக்குப் பாராட்டும் கிடைக்கும். ஓகே தானே? சந்தோஷமா? நல்லாத்தான் பேசிக்கிட்டிருப்பீங்க.. எனினும் நடுநடுவில் சுள்ளுன்னு ஒரு வார்த்தை வருது பாருங்க. அதை மட்டும் அவாய்ட் செய்துடுங்க, ப்ளீஸ்.. புது ரக ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீங்க. அரசாங்க நெருக்கடிகள், காவல்துறையின் கண்காணிப்புகள், நீதிமன்ற சம்மன்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதால் நிதி நிலைமை மேம்படும். குருபார்வை காரணமாக வங்கியில் சேமிப்பு உயரும். வருமானம் நிறைய அதிகரிக்கும்.  செலவுகள் சிறிதளவு இருக்கும். உற்சாகமா மனநிலையுடன் இருப்பீங்க.

மிதுனம்

மகன் வெளியூர் அல்லது வெளிநாடு போவார். கல்வி  அல்லது பணிக்காகன பயணம் அது.. உங்களுக்கு அது பற்றிப் பயம் அல்லது கவலையா? நோ நோ. சூப்பர் வெற்றியுடன் வருவார். பொறாமை புழுக்கம் எக்ஸட்ராவையெல்லாம் மூட்டை கட்டித் தூக்கிப்போடுங்க. எக்கச்சக்க  கோயில்ஸ் விசிட்டா? புது வேலை கிடைக்கும். பேங்க் அல்லது அரசாங்க வேலை கிடைக்க அதிக வாய்ப்புண்டு.  நீங்களே பணிக்காக வெளியூர் வெளி நாடுன்னு போக வேண்டி யிருக்கலாம். சந்தோஷமாய்க் கிளம்புங்க. லாபம்தான். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வேலை வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீங்க. அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும், நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வீங்க. நல்லோர் உதவியால் எதிலும் வெற்றி பெறுவீங்க. பணவரவு சரளமாக இருக்கும். செலவுகளைச் சமாளிப்பீங்க.

கடகம்

எவ்வளவு கவலை கஷ்டம் வந்தாலும் பனி போல் நீங்கும் பிரச்சினை எதுவும். நமக்குத்தான் வாய் இருக்கு.. நமக்குத்தான் பாஷை தெரியும்னு பேசித் தள்ளிட்டுப் பிற்பாடு தவிக்காதீங்க, வாயில் கட்டாயம் பூட்டுப் போட்டுக்கணும். சொல்லிட்டேன்.  அப்பாவுக்கும் உங்களுக்கும் சூப்பரான நல்லுறவு நிலவும், திடீர் திடீர் என்று அதிருஷங்கள் உங்க மடியில் வந்து உட்கார்ந்து கொஞ்சம். என்ஜாய். அலுவலகத்தில் நீங்கதான் மையக்கவர்ச்சியா இருப்பீங்க. சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீங்க. சிறுசிறு சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். கண்டுகொள்ளாமல் உங்க கம்பீரத்தைக் கைக்கொண்டு முன்னேறுங்கள். வழக்கமான பொறுமை கைகொடுக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாய் நாலு இடங்களுக்குப் போவீங்க. வெற்றி பெற சற்று அதிகமாக உழைத்தால் போதும். வெளிநாடு போக ஆசைப்பட்டவர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும்

சிம்மம்

திருமணம் தள்ளிப்போய் டிலே ஆனால் கவலையே படாதீங்க. எல்லாம் நன்மைக்கே என்பதை மட்டும் மைண்ட்ல உறுதியா ஆணியடிச்சு மாட்டிடுங்க. வாழ்க்கைத் துணைவர் வெளியூர் வெளிநாடு போவாங்க.  குடும்பத்தைப் பிரிஞ்சு அலுவலக ரீதியாய்ப் வெளியூர்ப்பயணம் போக வேண்டி வரும்.  அந்தப் பிரிவுக்கு உங்களுக்குப் பரிசா அவருக்கு  உத்யோகமும் சம்பளமும் பாராட்டும் அவார்டும் ரிவார்டும் கிடைக்குமே. கணவருக்கு/ மனைவிக்கு வாழ்க்கை யில் பெரிய முன்னேற்றங்கள் இருக்கும். அதில் உங்க பங்கும் இருக்கும். புது விஷயங்களைக் கற்க ஆர்வம் வந்து அதிலும் மின்னுவீங்க. அலட்சியம் மற்றும் கவனச் சிதறல் கூடாது என்பதை மட்டும் நல்லா நினைவில் வைத்துக்கொண்டால் போதும். உங்க திட்டங்களுக்கு வீட்டில் உள்ளோரின் ஆதரவு இருக்கும். பிள்ளைகள் உங்களின் அருமையைப் புரிந்து கொள்வாங்க. அவர்களின் உயர்கல்வி, வேலை திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இந்த வாரம் தீர்மானிக்கப்படும்.

கன்னி

பாஸ் கூப்பிட்டுப் பாராட்டுகிறாரோ இல்லையோ இத்தனை நாள் திட்டிய திட்டுக்கு மாற்றா ஒரு புன்னகையாவது அளிப்பார். மம்மிக்கு வாகனம் கிடைக்கும். புதிய பிசினஸ் அல்லது உத்யோகத்தில் காசு மழை கொட்டும். உடல் ஆரோக்யத்தில் பிரச்சினை இருந்தாலும் டென்ஷனெல்லாம் ஆக வேணாம்மா. உங்க உழைப்பும் நல்ல சிந்தனைகளும் லாபத்தையும் ஆரோக்யத்தையும் தரும். நடவடிக்கைகளில் நிறைய கவனம் தேவை, அடக்கி வாசிங்கப்பா . பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருந்த உங்களுக்கு இது மிகவும் நன்மைதரும் வாரமாக அமையும். மனதிலிருந்த சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தி என வீட்டில் ஏதாவது ஒரு சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீங்க. விட்டு போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவாங்க.

துலாம்

ஆரோக்யம் ஆரோக்யம்னு சொல்லுவாங்களே.. அப்படி ஒரு விஷயம் நினைவிருக்கா? கவனம் தேவை. ஆமாம் சொல்லிட்டேன். . ரூபாயை அடுக்கி வைக்க இன்னொரு வீடுதான் வாங்கணும் நீங்க. அவ்ளோ பண வரவு வரும். சரியாச் சேமிச்சு வெச்சுக்கங்க. எவ்ளோ உழைக்கறீங்க. சமீபத்தில் வெற்றிகளும் சுப நிகழ்ச்சிகளும் லாபங்களும் அதிகரிச்சிருக்குமே? புகழும் பேரும் அபரிமிதமாய்க் கிடைக்கும். கோயில்களுக்குப் போகும் திட்டங்கள் சற்று தள்ளிப் போனாலும் ஒரு வழியா நிறைவேறும். வேலையில் சின்னச்சின்ன குடைச்சல்கள் இருந்தாலும் சமாளித்து வேலையை தொடர்ப்பாருங்கள். புதிய வேலை மாற நினைக்கக் கூடாது. தொழில் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்ய நினைக்க வேணாங்க. வாரக்கடைசியில் நிறைய நன்மைகள் நடைபெறும். சோம்பல் இல்லாமல் அன்றைய வேலையை அன்றைக்கே முடிக்கும் திறன் வரும். எனவே பாராட்டுக்கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 18 முதல் 21 வரை

விருச்சிகம்

அவசியமற்ற பேச்சகள் வேண்டவே வேண்டாம். மம்மிக்கு ஏரளமான நன்மைகள் வரும். நிறைய நிறைய லாபங்களும் வகைவகையான வருமானங்களும் வரும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க ..ஆம். உன்னைப் போல உண்டான்னு அலுவலகத்தில் ஆரத்தி எடுப்பாங்க…கரெக்ட். உடனே அகமகிழ்ந்து விலை உயர்ந்த பொருளையெல்லாம் எடுத்துக் குடுத்துடாதீங்கப்பா.. உணர்ச்சிவசப்படாம அடக்கி வாசிங்க. குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். சனி பகவான் தன் பார்வையால் உங்களை அதிகமா உழைக்க செய்வார். அதற்கேற்ற வருமானம் இருக்கும் என்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். உங்க வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும், இது உங்களுக்கு சந்தோஷம் ஏற்படுத்தும். அதைத் திறம்பட சமாளிப்பீங்க.

சந்திராஷ்டமம்: மார்ச் 21 முதல் 23 வரை

தனுசு

மகனையோ மகளையோ வெளிநாட்டில் படிக்க வைக்கக் கொஞ்சம் செலவு செய்ய வேண்டி வரலாம். டோன்ட் ஒர்ரி. பல மடங்காகித் திரும்பி வரும். குடும்பத்தில் பலர் ஒன்றாய்க்கூடுவீங்க. ஜாலியா சந்தோஷமாய்ப் பொழுது கழியும். என்ஜாய். நீங்க எப்ப சிரிப்பீங்க எப்ப கடிப்பீங்கன்னு தெரியாம அடுத்தவங்க குழம்பறதைப் பார்க்கறதுல என்னங்க சந்தோஷம்? நல்ல காரணத்துக்காக உங்களுக்கு  ரொம்பவும் வேண்டியவங்களைப் பிரிய நேரலாம். .பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீங்க. தங்க நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் வாங்கு வீங்க. தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குடும்ப வருமானம் உயரும்.  துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்து வீங்க. மன உபாதைகள் விலகும். புதிய எண்ணங்கள் தோன்றும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 23 முதல் 25 வரை

மகரம்

வெளிநாடு சம்பந்தமான வேலை அல்லது பிசினஸ்ல பிசியாகி டாலர்களைக் கல்லாவில் நிரப்பிக்குவீங்க. எல்லாமே சற்று ஸ்லோமோஷனில் நகர்ந்தாலும் வெற்றி மின்னல்  மாதிரி கிடைக்கும். இன்னிக்கு ஒரு பிளேனில் நாளைக்கு ஒரு ரயிலில்னு நிறைய அலைச்சல்தான். ஆனாலும் அதை நீங்க பொருட்படுத்த மாட்டீங்க. கவலையைத் தூக்கி மேஜைக்குக் கீழே உள்ள அந்த டஸ்ட் பின்னில் போடுங்க. இப்போதைக்கு லோன் எதுவும் வாங்கவும் வேண்டாம் கொடுக்கவும் வேண்டவே வேண்டாம். குடும்பத்துடன் கோயில்களுக்குக் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீங்க. சில காரணங்களால் நீங்கள் உங்க வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். வீட்டிலிருந்து விலகி இருக்கும்போது, நீங்கள் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நன்கு பெறுவீரகள். அவர்களுடன் நன்கு தொடர்பில் இருப்பீங்க. நீங்கள் உங்க குடும்பத்திற்கு நேரம் கொடுப்பீங்க என்பதால் சுமுக உறவு இருக்கும்.

சந்திராஷ்டமம்: மார்ச் 25 முதல் 27 வரை

கும்பம்

ஏகப்பட்ட அட்ராக்ஷன் கூடும். உங்க செல்வாக்கு உயரஉயரப் போகும். சகோதர சகோதரிகளுக்கு குட் நியூஸ் உண்டு. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதற்கேற்ப அனைவரையும் பேச்சிலேயே கவர்ந்து மகிழ வைப்பீங்க. அலுவலகத்தில் மண்டையை பிச்சுக்கும்படியா சம்பவங்கள் நடந்தாலும் பொறுமையா சரி செய்வீங்க. ஒரு வேளைக்கு நடந்துக்கிட்ட மாதிரி மறுவேளைக்கு நடந்துக்க மாட்டீங்க. ஏராளமான குண மாற்றங்கள் இருந்துக்கிட்டே இருக்கும். உணவுப் பழக்கத்தை முறைப்படுத்திக்கிட்டா பிரச்சினை வராது. சென்ற சில வாரங்களாக இருந்து வந்த மனக் குறைகள் விலகும். கலைத்துறையில் அதிக ஈடுபாடு வரும். வேலைப் பகுதியிலும் ஏராளமான பணிகள் இருக்கும். அனைத்தையும் புன்னகையுடன் சமாளிப்பீங்க. ஆனால் ஆரோக்யத்தில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் முன்னேறும் வழிமுறைகளை யோசித்துச் செயலாக்கி வெற்றி பெறுவீங்க.

மீனம்

வெளிநாட்டில் உள்ள உறவினர்களால் லாபமும் நன்மையும் கிடைக்கும்.  கன்னாபின்னான்னு சாப்பிடாதீங்க. அப்புறம் சிரமப் படாதீங்க. ஆரோக்யத்தைக் கெடுக்கும் எந்தப் பழக்கத்தையும் வெட்டென மறங்க. பார்வை டெஸ்ட் செய்துக்குங்க. நண்பர்கள் மற்றும் சிநேதிங்க கிட்ட கோப தாபங்கள் வேண்டாம், ப்ளீஸ். பிறகு ஸாரி சொன்னாலும் ஒட்டாது. தேவையா? குழந்தைகள் வாழ்வில் மிகவும் எதிர்பாராத நன்மை மிகவும் சட்டென்று நிகழும். பொதுவாகப் பொருளாதார முன்னேற்றம் உண்டு. செய்து வரும் தொழிலில் நல்ல லாபம், உத்யோகத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து, உயர்வு ஏற்படும். உண்மையான செயல்பாட்டிற்கும் கடினமான உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீங்க. அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். புதிய தொழில் முயற்சி நல்ல பலனை தரும். தந்தை வழி சொத்துக்களில் பலன் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படாமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். இது நாள் வரையில் ஏற்பட்டு வந்த தடைகள் அகலும்.