டில்லி

ந்திய தேசிய காங்கிரஸ் என அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சி 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி துவங்கப் பட்டது.

இந்தியாவின் பழமையான மற்றும் பெரிய தேசியக் கட்சிகளில் ஒன்று இந்திய தேசிய காங்கிரஸ் என அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சி ஆகும்.    மத்திய அரசை அதிக ஆண்டுகள்  ஆட்சி புரிந்த கட்சி என்னும் பெருமையைக் கொண்டது காங்கிரஸ் கட்சி.  கடந்த 1885 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி துவங்கப் பட்டது.

முதலில் இந்தியர்களுக்கு அரசில் பங்கு வாங்கித் தருவதை குறிக்கோளகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி பிறகு பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதை தன் கொள்கையாகக் கொண்டது.    இந்தியா விடுதலை அடைந்ததில் காங்கிரஸ் கட்சிக்கு முழுப் பங்கு உண்டு.    சுதந்திரப் போராட்டத்தின் மூலம், திலகர், லாலா லஜபத் ராய், கோகலே, முகமது அலி ஜின்னா, வ உ சி ஆகியோர் தலைவர்களாக உருவானார்கள்.     அந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இயங்கியது.   நேரு,  படேல்,   காமராஜர் போன்ற பல தலைவர்கள் இந்தக் கட்சிக்காக தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

சுதந்திரம் அடைந்த பின் அமையப்பட்ட அரசு காங்கிரஸ் அரசாகும்.   அதில் நேரு  பிரதமராக இருந்தார்.   அவர் மறைவுக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரியும்,  சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தியும் பிரதமர் பதவி வகித்தனர்.    இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார்.    பிறகு அவரும் ஒரு மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப் பட்டார்.   தற்போது இளம் தலைவர் ராகுல் காந்தி தலைவராக இக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.