கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் இன்று

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த நாள் (அக்.3 -1990) இன்று.

ஜெர்மனி நாடு பத்தாம் நூற்றாண்டில் (கி.பி. 962) புனித ரோமானிய பேரரசால் தோற்றுவிக்கப்பட்ட நாடு.

அதன்பின்னர்  ஜெர்மனை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர் 1939 முதல் 1945 வரை நடைபெற்ற  இரண்டாவது உலகப் போரில் தோல்வி அடைந்தார். அதையடுத்து அவர்  தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக நேச நாடுகளிடம் ஜெர்மனி சரண் அடைந்தது. அப்போது ஜெர்மனியை அண்டை நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப பிரித்துக்கொண்டனர்.

ஜெர்மனி இரண்டாக பிரிக்கப்பட்டு மேற்கு ஜெர்மனி என்றும், கிழக்கு ஜெர்மனி என்றும் பிரிந்தது.

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க ஆதரவு அரசாங்கமும், கிழக்கு ஜெர்மனியில் ரஷிய ஆதரவு அரசாங்கமும் அமைக்கப்பட்டன. பெர்லின் நகரமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1950-ம் ஆண்டில், கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஏராளமான பேர் மேற்கு ஜெர்மனிக்கு அகதிகளாக குடியேறினார்கள். அகதிகள் போவதற்கு பெர்லின் நகரம்தான் வழியாகப் பயன்பட்டது.

எனவே, அகதிகள் போவதை தடுக்க பெர்லின் நகரில் பெரிய சுவர் ஒன்றை கிழக்கு ஜெர்மனி அரசாங்கம் அமைத்தது. அதுவே இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லையானது. அது “பெர்லின் சுவர்” என்று அழைக்கப்பட்டது.

அமெரிக்காவின் உதவியுடன் மேற்கு பெர்லின் நகரம் புதுப்பிக்கப்பட்டது. சுமார் 45 ஆண்டு காலம் இரு ஜெர்மனிகளும் பிரிந்தே இருந்தன. இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஜெர்மனி மக்கள் உணர்ச்சியால் ஒன்றுபட்டவர்களாகவே இருந்தனர்.

ஆகையால், அவர்கள்  மீண்டும் ஒன்றாக இணைய பல்வேறு போராட்டங்களை நடத்த தொடங்கினர். இந்நிலையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் ஜெர்மனியில் இணைப்பு கோரிக்கை வலுப்பெற்றது.

அதைத்தொடர்ந்து 1989 அக்டோபர் மாதம், இணைப்பு கோரிக்கை மாபெரும் போராட்டமாக வெடித்தது. ரஷிய அதிபர் கார்பசேவும் இணைப்பு முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டினார்.

இதனை தொடர்ந்து இரு நாடுகளும் இணைய ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு ஜெர்மனிகளையும் ஒன்றாக இணைப்பது என்று 1990-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது.

பிரிவினையின் அடையாளமாக காட்சி அளித்த பெர்லின் சுவரை அப்போது மக்கள் இடித்துத்தள்ளினர். ஒப்பந்தத்தின்படி 1990-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி இரு ஜெர்மனிகளும் ஒரே நாடாக இணைந்தன.

அக்டோபர் 2-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தேவாலய மணிகள் முழங்க பட்டாசுகள் வெடிக்க இரு நாடுகளும் இணைந்தன.

8 கோடி மக்கள் தொகை கொண்ட ஜெர்மனி இன்று உலகின் வல்லரசுகளில் ஒன்றாக திகழ்கிறது.
English Summary
Today is the Day of East Germany and West Germany joined