சான்பிரான்சிஸ்கோ,

மூக வலைதளமான பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கியவர் மார்க். 2007ம் ஆண்டு   பேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க்  உலக மக்களுக்கு  அறிவித்தார்.

அப்போது, இது   சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட இயங்குதளம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பேஸ்புக் வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தனது பேஸ்புக் சமூக வலைதளம் மூலம்  மக்களைப் பிரித்து விட்டேன்; மன்னித்து விடுங்கள் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார் மார்க்.

யூதர்களின் வருடாந்திர புனித தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி தனது பேஸ்புக் வலைதளத்தில் மார்க் பதிவிட்டிருப்பதாவது,

நம்முன் கடந்து போன ஒரு வருடத்தைப் பிரதிபலிக்கும் அதே நேரத்தில், நமது தவறுகளுக்கு மன்னிப்பினைக் கோரி நிற்கிறோம்.

அவ்வாறு இந்த வருடத்தில்நான் யாரை எல்லாம் வருத்தப்படுத்தி இருக்கின்றேனோ அவர்களிடம் மன்னிப்பினைக் கோருகிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன்.

நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மூலம் பெரும்பாலும் மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்திருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுக்காக நான் மன்னிப்பு  கோருகிறேன்.  இனி வரும் காலங்களில்  என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சி  செய்வேன். . வரும் வருடமானது நம் அனைவருக்கும் சிறப்பான ஒன்றாக அமையும். வாழ்க்கையில் சிறப்பான இடத்தினை அடைவீர்கள்.

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.