ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞானி ‘ரீனே லீனெக்’ பிறந்த தினம் இன்று

தயத்துடிப்பை அறியும்  ஸ்டெதாஸ்கோப்பை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரீனே லீனெக் (René Laennec) கின்  237 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பிறந்த ஆண்டு  பிப்ரவரி 17, 1781.

மதுத்துவரான ரீனே  தனது மருத்துவமனையில் இருக்கும் போது பெண் ஒருவர் இதயம் தொடர்பான பிரச்னைக்கு  மருத்துவம் பார்க்க வந்திருந்தார். இதயத்துடிப்பை அறிய, நோயாளியின் மார்பகத்தில் காதை வைத்து தான் உணர முடியும்.  ஆனால்  கூச்ச சுபாவம் கொண்ட ரீனே அந்த பெண்ணின்  இதயத்துடிப்பை அறிய, மார்பில் காதை வைத்து கேட்க சங்கோஜப்பட்டார்.  அதன் விளைவாக அவர் கண்டுபிடித்த கருவிதான் ஸ்டெதாஸ்கோப்.

ஆரம்பத்தில் ஒரு தாளை சுருட்டி, உருளையாக்கி, அதன் மூலம், ஒருபுறத்தை நோயாளியின் இதயத்திலும், மறுமுனையை தனது காதிலும் வைத்து இதய துடிப்பை உணர்ந்ததார். இதற்காக காரணமாக அவர் கண்டது, சிறுவர்கள்  மரக்குச்சியின் ஒரு முனையில் குண்டூசியால் குத்தித் துளை போட்டு ஒலி எழுப்பி விளையாடி வந்தனர். அதைகண்ட ரீனேவுக்கு பொறி தட்டியது. அதன் விளைவாகவெ ஸ்டெதாஸ் கோப் உருவாக்கம் நடைபெற்றது. முதலில் தயாரிக்கப்பட்ட மரத்திலான கருவியைக்கொண்டே நோயாளி களைச் சோதித்தார்.

இந்த முறையானது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு உதவும் என்று அறிந்த ரீனே, தனது ஸ்டெதாஸ்கோப் குழாயின் ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து, மறு முனையை தன காதில் வைத்து அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த ஒலிகளைக் கேட்டார்.

ரீனே மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை 1816 ஆம் ஆண்டு. உருவாக்கினார். அதன் பரிணாம வளர்ச்சியே தற்போதைய ஸ்டெதாஸ் கோப். இன்றைய மருத்துவ துறையில் இன்றியமையாத கருவியாக, மருத்துவர் என்பவதற்கு அடையாளமாகவும் ஸ்டெதாஸ்கோப் திகழ்ந்து வருகிறது.

.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 'ரீனே லீனெக்', 'ரீனே லீனெக்' பிறந்த தினம் இன்று, medical scientist Rene Laennec, René Laennec, stethoscope, Today is the birthday, who founded the stethoscope, மருத்துவ விஞ்ஞானி, ஸ்டெதாஸ்கோப்
-=-