கிறிஸ்தவர்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அக்டோபர் 2ந்தேதி   கல்லறை திருநாள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, இன்று கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அப்போது, இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையும் செய்கின்றனர்.

இதையொட்டி, உலகம் முழுவதும், இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களுக்கு சென்று இறந்தவர்களின் கல்லரை முன்பு மலர்களாலும், மெழுகுவர்த்தி ஏற்றியும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும். அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிக்கப்படும்.