மும்பை தாக்குதல்கள் நடந்த தினம் இன்று (26/11/200/)

Must read

மும்பை

டந்த 2008ஆன் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடூர தாக்குதல்கள்  நடைபெற்றன.

மும்பையில் பல இஸ்லாமியத் தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும் 26/11/2008 ஆம் வருடம் நடந்த கொடூர தாக்குதல்கள் முக்கியம் வாய்ந்தவை.  இந்த தாக்குதலில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டது உலகெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

மும்பையில் எட்டு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்றன.   நவம்பர் 26 அன்று தொடங்கி நவம்பர் 29 வரை நடைபெற்ற இந்த தாக்குதல் பத்து பேர் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவான லஷ்கர் ஏ தொய்பாவால் நடைபெற்றது.   நவம்பர் 26 அன்று கொலாபா அருகில் இந்த பயங்கரவாத கும்பல் இரண்டு இடங்களில் படகில் வந்து இறங்கி உள்ளனர்.  இது பற்றி உடனடியாக இரு மீனவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர்.   ஆனால் போலீஸ் இதை கவனிக்கவில்லை.

முதல் தாக்குதல் சத்ரபதி சிவாஜி ரெயில் முனையத்தில் பயணிகள் தங்கும் இடத்தில் நிகழ்ந்தது.   இரவு சுமார் 9.30 மணி அளவில் இருவர் புகுந்து, ஏ கே 47 துப்பாக்கிகளைக் கொண்டு திடீரென துப்பாக்கி சூடு நடைத்தனர்.   அதில் 58 பயணிகள் கொல்லப்பட்டனர்.   அத்துடன் அவர்களைப் பிடிக்க முயன்ற 8 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   அங்கு ஆரம்பித்த தாக்குதல் மும்பையில் தொடர்ந்தது.   நாடெங்கும்  பரபரப்பையும் பீதியையும் உண்டாக்கியது.

தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்றவர்கள் காவல் படையினரின் தாக்குதலில் மரணம் அடைந்தனர்.   அஜ்மல் கசாப் வாக்குமூலத்தின் படி லஷ்கர் ஏ தொய்பாவின் தாக்குதல் இது என்பது தெரியவந்தது.   அந்த பயங்கரவாத இயக்கமும் அதை ஒப்புக் கொண்டது.   நீதிமன்ற விசாரணையில் அஜ்மல் கசாபுக்கு மரணதண்டனை வழங்கப்படது.   பின்னர் அது உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதி மன்றத்திலும் உறுதி செய்யபட்டது.  அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அஜ்மல் அளித்த கருணைமனுவும் நிராகரிக்கப்பட்டு 2012ஆம் வருடம் நவம்பர் 21ஆம் தேதி தூக்கிலிட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

More articles

Latest article